×

கள்ளக்குறிச்சி விவகாரம் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

கோவை, ஜூன் 21: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விஸ்வ பாரத் மக்கள் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வட தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு மரணங்கள் நடந்துள்ளது. மெத்தனால் கலந்த எரிச்சாராயம் குடிப்பதால் கண் பார்வை இழந்து, உயிர்பலி ஏற்படுகிறது. இதனால், அந்த குடும்பங்களின் நிலை கேள்விகுறியாகிறது.

இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்படாமல் இருக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும். கஞ்சா, அபின் மற்றும் போதை பழக்க வழக்கங்களை தடுக்க முதல்வரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை அமைத்து வருங்கால தமிழகம் போதை இல்லாத மாநிலமாக மாறுவதற்கு வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கள்ளக்குறிச்சி விவகாரம் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Govt ,Kallakurichi ,Coimbatore ,Vishwa Bharat People's Party ,National General Secretary ,Babuji Swamy ,North Tamil Nadu ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்...