×

அருப்புக்கோட்டை அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 பேர் சாவு

அருப்புக்கோட்டை, ஜூன் 21: அருப்புக்கோட்டை அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜூ(62). முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டின் அருகே வசித்தவர் கணேசன்(66). இவர்கள் இருவரும் நேற்று அருப்புக்கோட்டை அருகே காந்திநகரில் உள்ள காஸ் நிறுவனத்திற்கு டூவீலரில் சென்றனர். அருப்புக்கோட்டை புறவழிச்சாலை தொட்டியங்குளம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது நேருக்குநேர் மோதியது. இதில் ராஜூ தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்திருந்த கணேசன் படுகாயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அருப்புக்கோட்டை அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Aruppukot ,Aruppukkottai ,Arupukkottai ,Raju ,Palayampatty Ceylon Colony ,Arupukkota, Virudhunagar District ,Ganesan ,
× RELATED லாரி மோதி கிளீனர் பலி