×

கண்டதேவியில் இன்று தேரோட்டம்

தேவகோட்டை, ஜூன் 21: தேவகோட்டை அருகே கண்டதேவியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனுறை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு தேரோட்டத்திற்காக அரசு மற்றும் சிவகங்கை சமஸ்தானம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை 6 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அனுமதி வழங்கப்பட்ட நபர்கள் மட்டுமே தேர் வடத்தினை இழுக்க உள்ளனர். தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

The post கண்டதேவியில் இன்று தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanda Devi ,Devakottai ,Periyanaiaki ,Udanurai ,Sornamoortheeswarar ,Ketai Nakshatra day ,Ani ,Sivaganga ,race ,
× RELATED 18 ஆண்டுக்குப்பின் தேரோட்டம் முதல்வர்...