×

சாலை மறியல்

ரெட்டியார்சத்திரம், ஜூன் 21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், தருமத்துப்பட்டி பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் பிடிஓ மலரவன்ல எஸ்ஐக்கள் சிராஜூதீன், கோட்டைராஜன், எஸ்எஸ்ஐ உமா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள், தருமத்துப்பட்டி ஊராட்சி செயலர் 100 நாள் வேலை முறையாக வழங்க மறுக்கிறார் என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பிறகே கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Reddiarchatram ,Darumathupatti ,Sembatti-Ottenchatram road ,PTO Malaravanla ,SI ,Sirajuddin ,Kotarajan ,SSI ,Uma ,Dinakaran ,
× RELATED ரெட்டியார்சத்திரம்...