×

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கொடைக்கானல், ஜூன் 21: கொடைக்கானலில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முருகேசன், செயலாளராக பாபுஜி, துணை தலைவராக சரவணகுமார், துணை செயலாளராாக ஆசிக் அகமது, பொருளாளராக கிறிஸ்டினா அற்புத மேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Bar Association ,Kodaikanal ,Bar Association of Kodaikanal ,Krupakaran ,Murugesan ,President ,Babuji ,Saravanakumar ,Vice President ,Asiq Ahmed ,Association ,Dinakaran ,
× RELATED கரூரில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்