×

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.33 லட்சம் ரொக்கம், 159 கிராம் தங்கம் காணிக்கை

 

ஈரோடு, ஜூன் 21: சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் வழங்கிய ரூ.33 லட்சம் காணிக்கை மற்றும் 159 கிராம் தங்கம் ஆகியவை இருந்தது. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

உண்டியல் திறப்பின் மூலம் ரூ.33 லட்சத்து 70 ஆயிரத்து 765 ரொக்கமும், மாற்று பொன் இனங்கள் வகையில் 159 கிராம், மாற்று வெள்ளி இனங்கள் 1474 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் திருப்பணி உண்டியல் மூலம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 312 வரப்பெற்றது. உண்டியல் திறப்பில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார், தக்கார், வங்கி பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.33 லட்சம் ரொக்கம், 159 கிராம் தங்கம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Erode ,Chennimalai Murugan Temple ,Chennimalai Subramania Swamy Temple ,Dinakaran ,
× RELATED சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்கள்