×

வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

சிதம்பரம், ஜூன் 21: சிதம்பரம் ஈபி இறக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் பிரதீஷ்(19). இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் வினித், சிபி, கிருபாகரன் ஆகியோருக்கு இடையே முன்விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரதீஷ், சி.தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பேச்சியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்கண்ட நபர்கள் அவரை கையாலும், காலாலும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பிரதீஷ் புகார் செய்தார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈபி இறக்கம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த கணேஷ்(23) மற்றும் வினித்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Prabhu ,Chidambaram EB Dimkam ,Pratish ,Ganesh ,Vineeth ,CP ,Krupakaran ,Dinakaran ,
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்