×

சாராயம் விற்ற 4 பேர் கைது

ஆத்தூர், ஜூன் 21:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வடகுமரை மேட்டுத்தெரு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, சாராயம் விற்பனை செய்த கலியமூர்த்தி மனைவி சிவகாமி(60), கிராங்காடு சின்னபையன் மகன் பால்ராஜ் (25), சிறுவாச்சூர் வடக்கு தெரு ராமசாமி(58), தலைவாசல் காமக்காபாளையம் பெரியம்மாள்(60) ஆகிய 4பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

The post சாராயம் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,Vadakumarai Metutheru ,Talivasal, Salem district ,Kaliamurthy ,Sivagami ,Krankadu Chinnabaiyan ,
× RELATED ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம்