×

பாஜ துணை தலைவர் மீது போலீசில் திமுகவினர் புகார்

தம்மம்பட்டி, ஜூன் 21: தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில், கடந்த 17ம் தேதி, பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜ துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார். இதையடுத்து, கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலர் சித்தார்த்தன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வரத.ராஜசேகர் உள்ளிட்ட திமுகவினர், கே.பி.ராமலிங்கம் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்த சண்முகநாதன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, தம்மம்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தனர்.

The post பாஜ துணை தலைவர் மீது போலீசில் திமுகவினர் புகார் appeared first on Dinakaran.

Tags : DMK ,BJP ,president ,Dhammambatti ,Ulipuram ,Tamil Nadu ,Vice President ,KP Ramalingam ,Chief Minister ,M. K. Stalin ,Kengavalli ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...