×

மது பாட்டில் வாங்கிவர மறுத்த பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல்

சேலம், ஜூன் 21: சேலத்தில் மது வாங்கிவருமாறு கூறி பிளஸ்-1 மாணவரை தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகர் சிங்காரமுனியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரகாஷ் (எ) எலி பிரகாஷ்(27). இவரது வீட்டின் அருகே அதேபகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவன் அமர்ந்துகொண்டிருந்தான். அந்த மாணவனிடம், மதுபாட்டில் வாங்கி வரும்படி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவன் மதுவாங்க போக முடியாது என மறுத்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், மாணவனை சரமாரியாக தாக்கினார். இதில் அவனுக்கு தலை மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இதுபற்றிய புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் ரவுடி எலி பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

The post மது பாட்டில் வாங்கிவர மறுத்த பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Attack on ,Salem ,Prakash ,Eli Prakash ,Singharamuniappan Temple Street ,Annadhanapatti ,Chanmuka Nagar, Salem ,
× RELATED வாலிபர் மீது சரமாரி தாக்குதல்