×

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த மத்திய சென்னை மக்களை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி நன்றி தெரிவித்தார்: மலர் தூவி உற்சாக வரவேற்பு

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன் எம்பி, பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் எம்பி, தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்களித்த வாக்காளர்களை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதன்படி, சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, திருவல்லிக்கேணி அயோத்தி குப்பத்தில் நன்றி தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி, வி.ஆர்.பிள்ளை தெரு, வெங்கடாசலம் தெரு, சிங்கராச்சாரியார் தெரு, பி.வி.நாயக்கர் தெரு, தேவராஜ் தெரு, மல்லன் பொன்னப்ப தெரு, ஷேக் தாவூத் தெரு, பெசன்ட் சாலை, கஜபதி லாலா முதல் தெரு, கந்தப்ப தெரு, இருசப்பன் தெரு, முத்தையா தோட்ட தெரு, பெரியமலையப்பன் தெரு, வி.எம்.தெரு, ராமாராவ் கார்டன், சைவ முத்தையா தெரு 1-3-5, வழியாக வி.எம்.தெரு பெரியார் சிலை வரை சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது பொதுமக்கள் தயாநிதி மாறன் எம்.பி.க்கு ஆரத்தி எடுத்தும், வெற்றி திலகமிட்டும் வரவேற்றனர். மேலும் ஏராளமானோர் மாடியில் இருந்து மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் மெயின் ரோடு, ராஜாஜி 2வது தெரு, புஷ்பா நகர் பிரதான சாலை, ராஜாஜி 3வது தெரு, புஷ்பா நகர் 1வது தெரு, டேங்க் பண்ட் சாலை, செங்கேணி அம்மன் கோயில் தெரு, டேங்க் பண்ட் மெயின் ரோடு, 110வது வட்டம் கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் 1வது தெரு,

ஜெயலட்சுமிபுரம் பிரதான சாலை, சொக்கட்டான் சாலை, வள்ளுவர் பிரதான சாலை, ஹாரிங்டன் சாலை வழியாக 6வது அவென்யூ, 7வது அவென்யூ. 109வது வட்டம் கிழக்கு நமச்சிவாயபுரம், மேற்கு நமச்சிவாயபுரம், நெல்சன் மாணிக்கம் சாலை, திருவேங்கடபுரம் 2வது தெரு, திருவள்ளுவர்புரம் 2வது தெரு, சக்தி நகர் 2வது தெரு, அபித் நகர், ராதாகிருஷ்ணன் நகர் சந்திப்பு, 109அ வட்டம் அருணாசலம் நகர் 1வது தெரு, எப்-5 காவல்நிலையம் அருகில், அண்ணா சிலை, பஜனை கோயில் தெரு, ஸ்ரீராமபுரம், வன்னியர் தெரு, சூளைமேடு பிரதான சாலையில் மக்களை சந்தித்து தயாநிதி மாறன் எம்பி நன்றி தெரிவித்தார்.

மேலும் 112வது வட்டம் சூளைமேடு பிரதான சாலை வழியாக சுபேதார் தோட்டம் சிறிய குடியிருப்பு, முத்துமணி தெரு, மைனர் டிரஸ்ட்புரம் கால்வாய் வழியாக புலியூர் 1வது பிரதான சாலை, டிரஸ்ட்புரம் 2வது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம் பிரதான சாலை. 112அ வட்டம் புலியூர் 1வது பிரதான சாலை, டிரஸ்ட்புரம் 6வது தெரு சந்திப்பு, டிரஸ்ட்புரம் 10வது குறுக்குத் தெரு, புலியூர் 2வது பிரதான சாலை, பாரதீஸ்வரர் காலனி 1வது தெரு, முத்து தோட்டம், சிவன் கோயில் தெற்கு தெரு, சிவன் கோயில் தெரு, வெள்ளாளர் தெரு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்ற இடங்களில் எல்லாம் தயாநிதி மாறன் எம்.பி.க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் சென்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த மத்திய சென்னை மக்களை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி நன்றி தெரிவித்தார்: மலர் தூவி உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Dayanithi Maran ,Madhya Chennai ,Chennai ,Dayanidhi Maran ,DMK ,Central Chennai Parliamentary Elections ,Central Chennai ,Elections ,Dinakaran ,
× RELATED ஒழுங்கு பிரச்சனையை பேச ஓம் பிர்லா அனுமதி மறுப்பு