×

காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதி சுற்றிவளைப்பு

அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன் (23). அடிதடி சம்பவங்களில் ஈடுபட்ட இவரை, கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ராகவேந்திரன், வழக்கு விசாரணைக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவானதால், அவரை கைது செய்ய கோயம்பேடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, போலீசார் ராகவேந்திரனை பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து ராகவேந்திரன் தப்பினார். அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ராகவேந்திரனை பிடித்து மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராகவேந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதி சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Ragavendran ,Nechundaram ,Coimbed ,Raghavendran ,Rhampur Court ,Dinakaran ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...