×

செல்போன் செயலி மூலம் உல்லாசத்துக்கு அழைத்து சென்று வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: இளம்பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: செல்போன் செயலி மூலம் உல்லாசத்து அழைத்து வடமாநில வாலிபரை தாக்கி ரூ.11 ஆயிரத்தை பறித்த இளம்பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருபவர் விஜய் தாப்பா (28). அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், ‘கிரன்ட்’ என்ற செல்போன் செயலி மூலம் அப்ரின் பர்கானா என்ற பெண்ணை அனுகியுள்ளார். அந்த பெண் பாலியலுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் தாப்பா, அப்ரின் பர்கானா அழைத்த வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருந்த பிறகு ரூ.10 ஆயிரம் கேட்டு அப்ரின் பர்கானா, விஜய் தப்பாவிடம் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எற்பட்டது. ஒருகட்டத்தில் அப்ரின் பர்கானா, பக்கத்து அறையில் உள்ள தனது அஸ்மிதா என்ற திருநங்கை மற்றும் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார், சோழவரத்தை சேர்நத் பரத்குமார் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அதன்படி விரைந்து வந்த அவர்கள், விஜய் தாப்பாவை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்தை பறித்து கொண்டு வெளியே துரத்தியுள்ளனர். இதுகுறித்து விஜய் தாப்பா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விரைந்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்ட அப்ரின் பர்கானா மற்றும் அவரது தோழியான அஸ்மிதா என்ற திருநங்கை ஆண் நண்பர்களான தினேஷ்குமார், பரத்குமார் அகியோரை கைது செய்தனர்.

The post செல்போன் செயலி மூலம் உல்லாசத்துக்கு அழைத்து சென்று வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: இளம்பெண் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Uttar Pradesh ,Vijay Thapa ,Sembarambakkam ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...