×

தகுதி வாய்ந்த இளைஞர்கள் விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு இணையதளம் வாயிலாக, வரும் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு, இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 8.7.2024 முதல் 28.7.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 3.7.2004 முதல் 3.1.2008 வரை பிறந்துள்ள 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ள, ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பான விவரங்களை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தகுதி வாய்ந்த இளைஞர்கள் விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Force ,CHENNAI ,Chennai district ,Agniveer Vayu Indian Air Force Exam ,District ,Collector ,Rashmi Siddharth Jagade ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில்...