×

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

குமாரபாளையம், ஜூன் 21: குமாரபாளையம் ராகவேந்திரா பப்ளிக் பள்ளியில், மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித நேயம் உள்ளிட்ட தலைப்புகளில் நடந்த இந்த போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ராகவேந்திரா பப்ளிக் பள்ளி 2ம் வகுப்பு மாணவர் நாணியுகன் வரைந்த ஓவியம், மாவட்ட அளவில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவரை, பள்ளியின் முதல்வர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Raghavendra Public School ,
× RELATED இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது