×

வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கிலோ ரூ.145 ஆக உயர்வு

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்டத்தில், பிப்ரவரி மாத இறுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அடுத்தடுத்த மாதங்களில் உச்சம் தொட்ட வெயில், 108 டிகிரி வரை பதிவானது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை உயர்ந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.80க்கு விற்பனையானது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 1ம் தேதி ரூ.100க்கும், கடந்த 3 நாட்களாக ரூ.145 என விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கிலோ ரூ.40 ஆக இருந்த ஏலக்கி வாழைப்பழம், நேற்று உழவர் சந்தையில் ரூ.68க்கும், ரூ.30 ஆக இருந்த ஒரு கிலோ நெல்லிக்காய் ரூ.80க்கும் விற்பனையானது.

The post வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கிலோ ரூ.145 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது