×

விளையாட்டு செய்திகள்

* இந்தியா வரும் வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்தது. வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட்(சென்னை, கான்பூர்), 3டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் செப்.19 முதல் அக்.12ம் தேதி வரை நடைபெறும். நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் தொடர் அக்.16 முல் நவ.5வரை நடக்கும். இங்கிலாந்துக்கு எதிரான 5டி20, 3ஒருநாள் தொடர்கள் வரும் ஆண்டு ஜன.22 முதல் பிப்.12வரை நடைபெறும். முதல் டி20 சென்னையில் நடைபெறும்.

* தைவானில் கவாசியுங் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதன் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் இந்தியாவின் லோகேஷ் ரெட்டி(373ரேங்க்), ஆஸ்திரேலியாவின் ஜாக் யூ(174வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் லோகேஷ் வெறும் 27நிமிடங்களில் 23-21, 21-10 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பெண்கள் அணி விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் வென்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த வேகம் ஷப்னம் ஷகில்(17) முதல் முறையாக தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகம் பூஜா வஸ்ட்ராகருக்கு பதிலாக 3வது ஒருநாள் ஆட்டத்தில் ஷப்னம் களம் காணக் கூடும்.

* உலக கோப்பையில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது அந்த நாட்டில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வீரர்கள் மட்டுமின்றி தேர்வுக்குழுவினரும் இதற்கு தப்பவில்லை. இந்நிலையில் 7பேர் கொண்ட தேர்வுக்குழுவை விரைவில் மாற்றியமைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

The post விளையாட்டு செய்திகள் appeared first on Dinakaran.

Tags : BCCI ,India ,Bangladesh ,New Zealand ,England ,Chennai ,Kanpur ,Sports News ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த...