×

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கள்ளக்குறிச்சி துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கள்ளக்குறிச்சி சம்பவத்தை அறிந்தவுடன், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஜவாஹிருல்லா (மமக தலைவர்: கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முஜிபுர் ரஹ்மான் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர்): கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பூரண மதுவிலக்குக்கான செயல்திட்டங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

The post கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vaiko ,MDMK ,General ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; மாணவர்களை...