×

சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள், ஓபிஎஸ் விடுவிப்பு எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை தொடங்கியது. மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

The post சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள், ஓபிஎஸ் விடுவிப்பு எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,CHENNAI ,High Court ,Thangam Tennarasu ,KKSSR Ramachandran ,Chief Minister ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED செந்தில்பாலாஜி வழக்கை 4 மாதத்தில்...