×

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடக்கிறது: மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகாண மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடக்கிறது: மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Agriculture Department ,Horticulture Department ,Agricultural Sales and Commercial Department ,Agriculture ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...