×

ஜமாபந்தி நிறைவு விழாவில் 125 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 498 மனுக்கள் குவிந்தன இதில், உடனடி தீர்வாக 125 பேருக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 1433வது பசலிக்கான வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் திருவள்ளூர் வருவாய் தீர்வாய அலுவலரும், உதவி ஆணையருமான ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் வரவேற்றார். தனி தாசில்தார் வெண்ணிலா, தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார்கள் ரவி, ஞானசவுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அன்று மாலை நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் 7ம் தேதி முதல் இதுவரை பட்டா பெயர் மாற்றம் வாரிசு சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் என மொத்தம் 498 மனுக்கள் வந்தது. இதில் 125 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது, 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 352 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி 15 நாட்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று வழங்கிய பட்டாக்களின் இட மதிப்பு ரூ.44 லட்சத்து 40 ஆயிரத்து 655 ஆகும். இறுதியில் தலைமை எழுத்தர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

The post ஜமாபந்தி நிறைவு விழாவில் 125 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Oothukottai ,pasali ,Uthukottai taluk ,
× RELATED அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் ஆணை