×

திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் தமிழ் தென்றல் திருவிக இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர் தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் கை.இந்திரா அனைவரையும் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் காரைக்குடி மு.ராகவேந்திரன் திருவிக இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பள்ளி முதல்வர் ஜோ.மேரி, தலைமை ஆசிரியர் தே.குமரீஸ்வரி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்த்தி, காவேரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Bharathidasan School ,Tiruvallur ,Tamil Theral Thiruvika Literary Forum ,Bharathidasan Secondary School ,M. D. Umashankar ,Kai Indira ,post ,Literary Forum Inauguration Ceremony ,Thiruvallur Bharathidasan School ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...