×

பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன்கள் பறிமுதல்

லாகூர்: பஞ்சாப் மாநிலத்தில் 2 இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ட்ரோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று தர்ன்தரன் மாவட்டத்தில் தால் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ட்ரோனை பறிமுதல் செய்தனர்.

இந்த 2 ட்ரோன்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் ேவட்டை நடத்தி வருகின்றனர்.

The post பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Punjab border ,Lahore ,Border Protection Force ,Punjab ,Ratankurth ,Amritsar district ,Dinakaran ,
× RELATED இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்