×

கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!

நன்றி குங்குமம் தோழி

*அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி சமைப்பதால், கேஸ் அதிகம் செலவாகும்.

*ஃப்ரிட்ஜில் வைத்த பொருளை சூடுபடுத்தும் முன் அதை அறை வெப்பநிலையில் சிறிது நேரம் வைக்கவும். ஃப்ரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

*சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவில் ஊட்டச்சத்துகள் அதிகம் வீணாவதில்லை.

*பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைத்து சமைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் விரைவில் சமைக்கப்படுவதோடு, எரிபொருளையும் சேமிக்க முடியும்.

*உணவுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தவும். அதிக தண்ணீர் சேர்ப்பதால், அது கொதிப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும்.

*மைக்ரோவேவ் மூலம் காய்கறிகளை வேகவைத்து பின் தாளிக்க மட்டும் கேசினை பயன்படுத்தலாம்.

*குளிக்க வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்கு பதிலாக ஹீட்டர்களை பயன்படுத்தலாம்.

*இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிந்த சமையலை அதிலேயே செய்யலாம்.

*ரெகுலேட்டர், ட்யூப், பர்னர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொள்ளவும்.

*சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை ஆஃப் செய்ய மறக்க வேண்டாம்.

*வீட்டில் அனைவரும் ஒரே நேரம் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினை அடிக்கடி சூடு செய்வதை தவிர்க்கும்.

*வாரம் ஒரு நாள் அடுப்பில்லாத சமையலுக்கு மாறுவது நல்லது.

*அதிக நேரம் வேக வேண்டிய பருப்பு வகைகளை முன்கூட்டியே ஊறவைத்தல் நல்லது.

– சுந்தரி காந்தி, சென்னை.

The post கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED தகவல் தொழில்நுட்ப வல்லுநர் to தொழிலதிபர்!