×

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். விஷ சாராயம் விவகாரம் குறித்து உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. கருணாபுரம் அரசு பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன், உள்துறை செயலாளர் அமுதா ஆலோசனை நடத்தினார். தாய் – தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Principal Secretary ,Amutha ,Kallakurichi ,Karunapuram ,Home Secretary ,Karunapuram Govt ,Home ,Amuda ,Dinakaran ,
× RELATED அரசு நிதியுதவி பள்ளிகளில் உபரியாக...