×

விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி: விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். காவல்துறை அதிகாரிகள் மீது தவறு இருப்பதன் காரணமாகவே மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆய்வு செய்து 2 நாளில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

The post விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,Kallakurichi ,Minister AV ,Velu ,District S.P. ,Chief Minister ,
× RELATED மதுரவாயல்- துறைமுகம் சாலையின்...