×

முரளிதரன் ஆனார் மதுர் மிட்டல்: படப்பிடிப்பு முடிந்தது

 

சென்னை: மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், பல்வேறு சாதனைகளை புரிந்த வீரர். அவரது வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘800’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை அவரது பிறந்தநாளான நேற்று வெளியாக இருக்கிறது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது ‘800’ படத்தின் மூலம் மீண்டும் டைரக்‌ஷனுக்கு திரும்பி உள்ளார். இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது

The post முரளிதரன் ஆனார் மதுர் மிட்டல்: படப்பிடிப்பு முடிந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Muralitharan ,Madhur Mittal ,CHENNAI ,Muttiah Muralitharan ,Movie Train Motion Pictures ,MS Sripathy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலையாள ஹீரோயின்கள் அறிமுகம்