×

வெள்ளை நிற டி-சர்ட் அணிவது ஏன்…? ராகுல் விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி, நேற்று, தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், எப்போதுமே வெள்ளை நிற டி-சர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை’ நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படை தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமை ஆகியவற்றை குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் எங்கே, எப்படி இந்த மதிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்? என்பதை #WhiteTshirtArmy என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள்.

நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே கேள்விக்கு தேர்தல் பிரசாரத்தின் போதும் ராகுல் காந்தி விளக்கம் அளித்திருந்தார். அப்போது, நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்புகிறேன்” என்றார்.

The post வெள்ளை நிற டி-சர்ட் அணிவது ஏன்…? ராகுல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Rahul Gandhi ,
× RELATED நீட் பிஜி நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு;...