×

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: சென்னையில் 2 ரவுடி கைது; கொலை செய்ய திட்டமா?

அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக சென்னை வடக்கு மண்டல குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் பெரியபாளையம் பகுதிக்கு சென்று மாறுவேடத்தில் கண்காணித்து 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ்(39) என தெரியவந்துள்ளது. பெரியபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தபோது 3 நாட்டு வெடிகுண்டுகள், 4 கத்திகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து சுரேஷ் உள்பட 2 பேரை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு ரவுடி சென்னை அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சங்கர்(41) என்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.எதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பெரியபாளையம் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றிவந்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை எதற்காக பதுக்கிவைத்து இருந்தனர், யாரையாவது கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: சென்னையில் 2 ரவுடி கைது; கொலை செய்ய திட்டமா? appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Annanagar ,Chennai Northern Zone Crime Unit ,Periyapaliam ,Thiruvallur district ,Beriapaliam ,
× RELATED நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது