×

கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல் ஹாசன்!

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் ஹாசன் வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது; கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது. என்று கூறியுள்ளார்.

 

The post கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல் ஹாசன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kamal Haasan ,Chennai ,Tamil Nadu ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...