×

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய 29 அதிகாரிகள் நியமனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு செய்ய வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 29 பேரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 29 பேரின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்களின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு உடல்களும் வட்டாட்சியர், தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 29 பேரை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இறுதி சடங்கு செய்வதற்கான அனைத்து பணிகளையும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இறுதி சடங்கிற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நகராட்சி பார்த்துக்கொள்ள வேண்டும். பேரூராட்சி பகுதியில் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கிற்கான செலவுகளை பேரூராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊராட்சி பகுதிகளில் இறந்தவர்களின் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கிற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்கள் கோமுகி ஆற்று பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி தாண்டி பகுதியில் உள்ள நபர்கள் உயிரிழந்திருந்தால் அதே பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய 29 அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு!!