×

விஷச் சாராயத்தை ஒழிக்க வைகோ வலியுறுத்தல்..!!

சென்னை:விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி தருகிறது. விஷச் சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

The post விஷச் சாராயத்தை ஒழிக்க வைகோ வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Vaiko ,CHENNAI ,Madhyamik General Secretary ,Karunapuram ,Kallakurichi district ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு; மாணவர்களை...