×

செப்டம்பர் மாதம் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் மாதம் 14ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு நுறைகளில் உள்ள காவிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப்2, குரூப்4 ஆகிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்1 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் எனவும் 29 பணியிடங்களுக்கான குரூப் 1-பி, குரூப் 1-சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும் எனவும் 2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ, ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்;

“விண்ணப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 பதவிகள்:
*உதவி ஆய்வாளர்
*துணை வணிகவரி அலுவலர்
*இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்
*நன்னடத்தை அலுவலர்
*சார்பதிவாளர் நிலை II
*சிறப்பு உதவியாளர்
*தனி பிரிவு உதவியாளர்
*உதவிப் பிரிவு அலுவலர்
*வனவர்
என மொத்தம் 507 குரூப் 2 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

குரூப் 2ஏ பதவிகள்:
*தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர்
*முழு நேர விடுதிக்காப்பாளர்
*முதுநிலை ஆய்வாளர்
*தணிக்கை ஆய்வாளர்
*உதவி ஆய்வாளர்
*கைத்தறி ஆய்வாளர்
*மேற்பார்வையாளர் அல்லது இளநிலை கண்காணிப்பாளர்
*உதவியாளர்
*வருவாய் உதவியாளர்
*செயல் அலுவலர் நிலை II
*இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் தணிக்கை ஆய்வாளர்
*நேர்முக எழுத கணக்கர்
*இளநிலை கணக்கர்
*விரிவாக்க அலுவலர்
*கீழ்நிலை செயலிடை எழுத்தர்
என மொத்தம் 1820 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாயுள்ளது.

The post செப்டம்பர் மாதம் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Dinakaran ,
× RELATED 6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு