×

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி

ஆன்டிகுவா: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்காவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. இன்று காலை நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. சற்றே கடின இலக்கை துரத்திய அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த னியின் முதல் 4 ஆட்டக்காரர்கள் 23, 38,36,36 ரன்கள் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சிரமமின்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் பிலிப் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.

The post டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Super 8 round ,T20 World Cup ,South Africa ,England ,Antigua ,United States ,West ,Indies ,T20 World Cup Super 8 round ,Dinakaran ,
× RELATED 2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!