×

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள் கண்காட்சி துவக்கம்-நவீன ரக துப்பாக்கிகளை பார்ப்பதில் மக்கள் ஆர்வம்

திருவெறும்பூர் : திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு தயாரிப்பு கருவிகள் கண்காட்சியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார்.அசாதிகா அமிர்த மஹோத்சவ் மற்றும் இந்தியா 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளூர் பொதுமக்கள் கண்காட்சிக்கு நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை வைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் நேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன்படி கான்பூரில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா லிட்.,டின் (எ.டபுள்யூ.இ.ஐ.எல்) ஒரு அங்கமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஊழியர் கிளப்பில் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீன கால ஆயுதங்கள் வரை இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகளை பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம் என திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் ராஜீவ்ஜெயின் கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆவலுடன் வந்து பார்த்து செல்கின்றனர். அதோடு இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கி, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்பிஎப், பிஎஸ்எப், காவல்துறை ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல் கப்பல் படையில் பயன்படுவதாகும். இது இஸ்ரேல் இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 450 முதல் 600 தோட்டாக்கள் வெளியேறும். இலக்கை குறி வைத்தால் தப்பாது. 2 கி.மீ. தூரத்தில் எதிரிகள் வரும்போது லேசர் மூலம் கண்காணித்து தாக்கக்கூடியது. மேலும் எதிரி நாட்டின் கப்பல்படையின் போர் கப்பல் இன்ஜினை தாக்கி செயல் இழக்க பெரிதும் உதவுகிறது. மேலும் 2022 மேக் இந்தியா திட்டத்தின் கீழ் இதே போன்ற துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.விழாவில் உதவி பொதுமேலாளர் ஏ.கே.சிங், இணை பொதுமேலாளர் குணசேகர் மற்றும் எஐசிஎல்எப் தொழிற்சங்க தலைவர் ராஜு, செயலாளர் அருள் சேவியர் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

The post திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு கருவிகள் கண்காட்சி துவக்கம்-நவீன ரக துப்பாக்கிகளை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Defense Equipment Exhibition ,Trichy ,Gun Factory ,Thiruverumpur ,Union ,Defense Minister ,Rajnath Singh ,Trichy Gun Factory ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...