×

வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.7.81 லட்சம் உண்டியல் வசூல்

வில்லிபுத்தூர், ஜூன் 20: வில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. வில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2ம் தேதி நடந்தது. சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தினர்.

அவ்வாறு செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.7,81,244, தங்கம் 5 கிராம், வெள்ளி 130 கிராம் வசூலாகி இருந்தது. நிர்வாக அதிகாரி முத்து மணிகண்டன், கோவில் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல்கள் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்களும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.

The post வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.7.81 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Tags : Vaithianatha Swami Temple ,Villiputur ,Kumbaphishek ,Williputur Madawar ,Kumbapishekam ,Vaithianathaswamy ,Temple ,Vaithianathaswamy Temple ,Villiputur Madawar Campus ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில்...