×

பாலசுப்பிரமணிய ஆலய கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 20: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தில் உள்ள விநாயகர், இடும்பர், நவகிரக தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களோடு எழுந்தருளியிருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது. கிராம தலைவர் ராஜதுரை தலைமை, ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க நேற்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

கோ பூஜை செய்யப்பட்டு புனிதநீர் நிரப்பப்பட்ட கும்பங்களை எடுத்து சென்று ஆலயத்தை வலம் வந்தனர். பின்பு கோயில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மோர்ப்பண்ணை கிராம நிர்வாக கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் மோகன், உப்பூர் கிருஷ்ணன்,கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருக வள்ளிபாலன் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பாலசுப்பிரமணிய ஆலய கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Balasubramaniya ,Temple ,Kumbapishekam ,R. S. ,MANGALAM ,R. ,Ashtabandana Kumbapisheka ,Balasubramaniya Swami Temple ,Vinayagar ,Idumbar ,Navagraga ,Parivara ,Morpannai ,Mangalam Uppur ,Village Leader ,Rajathurai Chief ,Ramanathapuram Jr ,Balasubramaniya Temple Kumbapishekam ,
× RELATED குன்னம் அருகே சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்