×

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கானார்பட்டி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

மானூர், ஜூன் 20: கலைஞரின் 101 பிறந்தநாளை முன்னிட்டு கானார்பட்டி பரி.யோவான் நடுநிலைப்பள்ளியில் திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சத்தியராஜ் வரவேற்றார். மத்திய மாவட்ட செயலாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் நோட்டு, சிலேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி, மாநகர விவசாயி அணி முருகன், பொறியாளரணி ரத்தினபாலன், மாநகர இளைஞரணி மைக்கேல், இளைஞரணி மீரான், கிளைச் செயலாளர்கள் ராபர்ட், செல்லத்துரை, கட்சி பிரமுகர்கள் ஜெயச்சந்திரன், பிரின்ஸ், சர்மிளா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநகர இளைஞரணி பொறுப்பாளர் மைக்கேல் செய்திருந்தார்.

The post கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கானார்பட்டி பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kanarpatti School ,Manur ,DMK ,Kanarpatti Pari Yovan Middle School ,Principal ,Satyaraj ,Central District ,D.P.M.Maithinkan ,Dinakaran ,
× RELATED கூலி தொழிலாளி தற்கொலை