×

கடையம் அருகே திமுக நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி

கடையம்,ஜூன் 20: கடையம் அருகே கருத்தலிங்கபுரம் திமுக நிர்வாகி மயிலரசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் குடும்பத்தாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட ெபாறுப்பாளர் ஜெயபாலன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். நிகழ்வில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பிரிதிநிதி பொன்செல்வன், மாவட்ட இளைஞரணி‌‌ துணை அமைப்பாளர் இலஞ்சி சுப்பிரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அழகு தமிழ், பால்துரை, உதயன், மாரி செல்வம், மனோகரன், கருத்தலிங்கபுரம் கிளை நிர்வாகி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடையம் அருகே திமுக நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : DMK ,Kadayam ,Mylarasan ,Tshelingapuram ,Tenkasi ,South District ,Supervisor ,Jayapalan ,Kadayam North Union ,Mahesh Mayavan ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழையால்...