×

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 20: கெலமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தலைமையில், இளநிலை உதவியாளர் சீனிவாசன், துப்புரவு மேற்வார்வையாளர் நாகேந்திரன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர், கெலமங்கலம் பஸ் நிலையம், கடைவீதி, மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டி டிபன் கடைகளில், பாஸ்ட் புட் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களிடம் ₹2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

The post பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : THENKANIKKOTA ,KELAMANGALAM ,DISTRICT ,SUPRAMANI ,KELAMANGALAM BUS STATION ,TROLLEY DEIBAN ,Dinakaran ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி