×

தனியார் ஊழியரிடம் ₹1.98 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, ஜூன் 20: பகுதி நேர வேலை இருப்பதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ₹1.98 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர்கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கேசிசி நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 9.12.2021 அன்று, இவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கொடுத்திருந்த எண்ணை தொடர்பு கொண்டு, கணேஷ்குமார் பேசினார். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு, சிறிது சிறிதாக ₹1 லட்சத்து 98 ஆயிரத்து 390 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித லாபமும் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர், அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுபற்றி நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ₹1.98 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Cybercrime ,Ganesh Kumar ,Hosur KCC ,Krishnagiri District ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...