×

சூதாடிய 12 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 20: குந்துகோட்டை பகுதியில், தேன்கனிக்கோட்டை போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய முனிகவுடு (32), முனிராஜ் (27), மாதப்பன் (40), ஹேமந்த் (29), லோகேஷ் (31), கிருஷ்ணமூர்த்தி (26), கோவிந்தசாமி (53), பெரிய மாதப்பா (65), கோனையப்பா (65) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அதே போல், அருளாளம் வீரபத்திர சாமி கோயில் அருகில் தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாலிவரம் மாதேஷ் (51), அஞ்செட்டி அருண்குமார் (33), கேரட்டி பெரியண்ணன் (42), ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாடிய 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kunthukottai ,Munikawdu ,Muniraj ,Madhapan ,Hemant ,Lokesh ,Krishnamurthy ,Govindaswamy ,Periya ,
× RELATED மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது