×

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

ஆரல்வாய்மொழி, ஜூன் 20: ஆரல்வாய்மொழி முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் பூக்குழி கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரல்வாய்மொழி முப்பந்தல்  ஆலமூடு அம்மன் திருக்கோயிலில் பூக்குழி கொடை விழா வருகிற ஜூலை மாதம் 28, 29, 30, 31 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் பூக்குழி இறங்கும் பக்தர்கள் விரதம் இருக்கும் விதத்தில் காப்பு கட்டு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருக்கும் விதத்தில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பால்குடம் எடுக்கும் பக்தர்கள், பூக்குழி இறங்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

The post முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Alamud Amman ,Aralvaimozhi ,Muppanthal Alamoodu ,Amman ,Temple ,Pookukhi ,Kodai ,Muppandal ,Alamoodu Amman temple ,Alamodu Amman ,
× RELATED ஆரல்வாய்மொழி அருகே பைக்- கார் மோதல் மனைவி, மகள் கண்முன்னே தொழிலாளி பலி