×

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்

வெள்ளக்கோவில், ஜூன் 20: வெள்ளக்கோவில் கேபிசிநகர் பகுதியில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது, இந்த ஆலயத்தின் முகப்பு பகுதியில் மாதா சுரூபம் உள்ளது, இந்த, மாத சுரூபம் பகுதியில் உண்டியல் உள்ளது, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் உட்புறம் வந்து மாதா சுரூபம் பின்பகுதியில் உள்ள பூட்டை உடைத்துள்ளார். இதேபோல், அப்பகுதியில் வணிக வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது, இந்த கட்டிடத்தில் தென்காசி பகுதியை சேர்ந்த முருகன், கணேசன் உட்பட 4 பேர் கடந்த 6 மாதங்களாக தங்கி கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இவர்கள் கட்டிட பணி முடித்து விட்டு கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர், அப்போது கணேசன் மற்றும் முருகன் செல் போன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Arogya Anai ,Vellakovil Kapisinagar ,Mata Surupam ,
× RELATED வெள்ளக்கோவிலில் மழை நீர் தேங்கிய பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு