×

பந்தலூர் அருகே காஸ் சிலிண்டர் லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து

பந்தலூர், ஜூன் 20: பந்தலூரில் இருந்து காஸ் சிலிண்டர் ஏற்றி கொன்று லாரி ஒன்று தேவாலா நீர்மட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தேவாலா பகுதியில் இருந்து வந்த கார் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவருக்கும், லாரி ஓட்டுநருக்கும் சேலசான காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் தேவாலா பந்தலூர் சாலையில் சிரிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தேவாலா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பந்தலூர் அருகே காஸ் சிலிண்டர் லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Bhandalur ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவு!!