×

பாலக்காடு கஞ்சிக்கோடு புதுசேரியில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

பாலக்காடு, ஜூன் 20: பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு புதுசேரி அருகே வேனோலியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். இவருக்கு லதா என்ற மனைவியும், தாசன், ஸ்ரீகுட்டன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் விவசாயத்திற்காக பல்வேறு வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. நெல்லிற்குரிய விலை கிடைக்காமல் பலமுறை இவர் குறைந்தபட்ச விலைக்கு தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரியவந்தது.

வங்கியில் வாங்கிய கடனை சரிவர திரும்ப செலுத்தமுடியாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர் கடந்த 7ம் தேதி அன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றின நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதுசேரி கசபா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகிறார்.

The post பாலக்காடு கஞ்சிக்கோடு புதுசேரியில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Palakkad Kanjikodu Puducherry ,Palakkad ,Radhakrishnan ,Venoli ,Kanjikodu Puducherry ,Lata ,Dasan ,Srikuttan ,
× RELATED பாலக்காடு நகராட்சி 6வது வார்டில்...