×

நகை கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

கோவை ஜூன் 20: கோவை செல்வபுரம் அசோக் நகர் பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (52). இவர் சாவித்திரி நகரில் உள்ள ஒரு தங்க நகை கடையில் நகை தொழில் செய்யும் வேலை செய்து வருகிறார். இரவு நேரத்தில் கடை பாதுகாப்புக்காக மகேந்திரன் அங்கேயே தங்கியிருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் கடையில் இருந்தபோது நகைக்கடையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்தார்.  சத்தம் வந்த இடத்திற்கு சென்றபோது அங்கேயிருந்த வாலிபர் ஒருவர் வேக வேகமாக அங்கிருந்து ஓடி தப்ப முயன்றார்.

உடனே மகேந்திரன் கூச்சலிட்டு அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் பிடிக்க முயன்றார். ஆனாலும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மகேந்திரன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றது முத்துக்குமார் (38) எனவும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

The post நகை கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mahendran ,Balaji Avenue ,Ashok Nagar, ,Selvapuram, Coimbatore ,Savitri Nagar ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!