×

ரூ.1.56 லட்சம் கோடி சொத்துக்களை விற்று பணமாக்கியது ஒன்றிய அரசு

புதுடெல்லி: ஒன்றிய அரசு 2023-24ம் நிதியாண்டில் ரூ. 1.56 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்று பணமாக்கி உள்ளது. ஒன்றிய அரசு சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1.56 லட்சம் கோடி சொத்துக்கள் விற்று பணமாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கை விட இது ரூ. 1.8 லட்சம் கோடி குறைவு ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை ரூ.6 லட்சம் கோடி சொத்துக்களை விற்று பணமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ. 2.5 லட்சம் கோடி நிதியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரூ.2.30 லட்சம் கோடி நிதி எட்டப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகங்கள் ரூ.40,314 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்று பணமாக்கியுள்ளன. நிலக்கரி அமைச்சகம் ரூ.56,794 கோடி, மின்சாரத்துறை ரூ.14,690 கோடி, சுரங்கங்கள் துறை ரூ.4,090 கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ரூ.9,587 கோடி, நகர்ப்புறம் ரூ. 6,480 கோடி, கப்பல் போக்குவரத்துத்துறை ரூ. 7,627 கோடி பணமாக்கி உள்ளன. இந்த தகவலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

The post ரூ.1.56 லட்சம் கோடி சொத்துக்களை விற்று பணமாக்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU Government ,New Delhi ,Union Government ,Union ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...