×

அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கோடேஷ்வர் கோயிலுக்கு எதிரேவுள்ள வி.ஐ.பி கேட் அருகே சத்ருஹன் விஸ்வகர்மா(25) என்பவர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சத்ருஹன் விஸ்வகர்மா நேற்று அதிகாலை அவரது கையில் இருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவலரின் மரணம் குறித்து தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி appeared first on Dinakaran.

Tags : Guard ,Ayodhya Ram temple ,Ayodhya ,Ram temple ,Godeshwar temple ,Ayodhya Ram ,temple ,Dinakaran ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திய அர்ச்சகர் மரணம்