×

திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்படி மலைப்பாதையில் பாதயாத்திரையாக செல்கின்றனர். இதற்கேற்ப தேவஸ்தானம் சார்பில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள், மலைப்பாதையில் வரும்போது அங்குள்ள அலுவலகத்தில் ஸ்கேனிங் செய்ய வேண்டும். அதன்பின்னரே சிறப்பு வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக மலைப்பாதையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகரித்ததால் ஸ்கேன் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மலைப்பாதையில் டிக்கெட் வாங்கும் சில பக்தர்கள், பாதயாத்திரையாக செல்லாமல் வாகனத்தில் சென்று சுவாமியை தரிசிக்கின்றனர். இதுகுறித்து தேவஸ்தானத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமிட்டா நடைபாதைகளில் டிக்கெட் ஸ்கேன் முறையை மீண்டும் கொண்டுவர புதிய செயல் அதிகாரி ஷியாமளாராவ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று முதல் ஸ்ரீவாரிமிட்டா மற்றும் அலிபிரி மலைப்பாதைகளில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஸ்கேனிங் செய்யாத டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Yehumalayan ,Tirumala ,Swami ,Tirupati Eyumalayan temple ,Divya ,Devasthanam ,Alibiri ,Srivari Metu ,Yeumalayan ,
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது